தெரிவுவிடைக் கருத்தறிதல் 1

Last updated almost 4 years ago
5 questions
Note from the author:
பயிற்சிகள்
2

ஏன் இந்த விரதங்கள்? நம் உடலுக்கு ஓய்வு கொடுக்கின்ற முதன்மையான நோக்கத்தில் பிறந்தவை இவை. மேன்மேலும் உண்டு வயிற்றை அடைத்து நாம் நம் உடலைத் துன்புறுத்துகின்றோம். இதனால் நம் உடலில் தேவையில்லாமல் சதை போடுகிறது. கீழே குனியக்கூட முடியாமல் தொப்பை பெருகுகிறது. சரியான அளவு உண்ணும்போது உடல் சுறுசுறுப்பாக இயங்குகிறது. மாறாகச் செய்தால் அதிகம் சிந்திக்க முடியாமல் தூக்கம் நம்மை ஆட்கொண்டுவிடும்.

அதிகம் உண்பதால் என்ன விளைகிறது?

2

நாம் சாப்பிடும் உணவானது செரித்து, உணவில் உள்ள கொழுப்புகள் ஆற்றலாக மாற்றப்படக் குறைந்தது ஆறு முதல் எட்டு மணி நேரம் தேவை. ஆனால், நாமோ உணவுக்கு இடைவெளி கொடுக்காமல் அடுத்த வேளை சாப்பாட்டைச் சாப்பிடுகிறோம். இதனால் உடலில் சேமிக்கப்பட்ட கொழுப்பானது உடலியக்கத்துக்குத் தேவையான ஆற்றலாக உபயோகப்படுத்தப்படுவது தடுக்கப்பட்டு, அப்படியே தேங்கிவிடுகிறது. தினமுமே அடுத்த வேளை உணவுக்கு இடையில் போதிய இடைவெளியை அனுமதிப்பதுகூட ஒரு வகையில் விரதம்தான்.

உணவிற்கு இடையில் போதிய இடைவெளி கொடுப்பது ஏன்?

2

இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் சிங்கப்பூரில் குற்றச் செயல்கள் வெகுவாகக் குறைந்துள்ளன என்று உள்துறை அமைச்சர் கூறினார். இதற்கு நமது காவல் துறையின் விழிப்புணர்வும், பொதுமக்களின் கடமை உணர்வும்தான் காரணமாகும். இருப்பினும் இன்றைய சமூகத்தினரிடையே ஏற்பட்டுள்ள மன மாற்றத்தையும் இதற்குக் காரணமாகக் கூற முடியும். தான் மட்டுமல்லாது தான் வாழும் சமூகமும் அமைதியுடன் இருக்க வேண்டும் என்னும் பாராட்டுக்குரிய மனப்பான்மை இன்று வளர்ந்து வருகின்றது. குற்றச்செயல்கள் குறைவுக்கு இதுவும் ஒரு காரணம். இத்தகைய மனப்பான்மை வரவேற்கத்தக்கது என்று கூறினார் அமைச்சர்.

குற்றச்செயல்கள் குறைந்ததற்கு எது காரணம்?

1

இருப்பினும் சில குற்றங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன. கல்வி கற்கும் காலத்தில் கற்பதை விடுத்துத் தீய நண்பர்களுடன் சகவாசம் கொள்ளல், போதைப்பொருளுக்கு அடிமையாதல் போன்றவற்றில் ஈடுபடுபவர்களும் இருக்கின்றனர். அவர்களிடம் இப்பழக்கம் எப்படி ஏற்பட்டது என்பதற்கு அவர்கள் தரும் பதில் ‘விளையாட்டாக’ ஆரம்பித்தது என்பதுதான். நாளை என்ன நடக்கும் என்று யோசிக்காமல் நண்பர்களின் வற்புறுத்தலுக்காக இச்செயல்களில் ஈடுபடுபவர்களே அதிகம்.

‘விளையாட்டாக’ ஆரம்பித்தது என்பது எதனைக் குறிக்கிறது?

2

அண்மையில் இளையர் ஒருவர் பல இடங்களில் தீ மூட்டிய சம்பவங்களுக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். இதுபோன்ற குற்றம் நிகழ்வதற்குச் சமூகத்திலுள்ளவர்களும் ஓரளவு பொறுப்பேற்க வேண்டும். அது நமக்குத் தொடர்பில்லாத ஒன்று என்று யாரும் தட்டிக்கழிக்க முடியாது. ஏனெனில், சமூகத்தில் நிகழ்கின்ற ஒவ்வொரு செயலும் தனிமனிதனை மட்டும் பாதிக்காது, அவனைச் சார்ந்த ஒட்டுமொத்த சமுதாயத்தையே பாதிக்கும்.

சமூகத்தின் பங்கு பற்றிக் கட்டுரை ஆசிரியர் கூறுவது யாது?